நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோட்டர்டாமில் உள்ள மருத்துவ மையத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், விரிவுரையாளர் ஒருவரும், ஒரு பெண் மற்றும் அவரது மகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் நெதர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் பல்கலைக்கழக மாணவர் எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.