லெகோ நிறுவனம் எனும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் இம்மாதம் முதல் மின்சார கட்டணத்துடன் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி முதல் இந்த வரிச் சேர்க்கை அமுலுக்கு வந்துள்ளதாகவும், இம்மாதக் கட்டணங்களில் இந்த புதிய வரி உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் இந்த வரி விதிக்கப்பட்டிருந் போதிலும், 2022ம் ஆண்டின் 25ம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக லெகோ பில்களில் இந்த கட்டணம் சேர்க்கப்படவில்லை.
இந்த லெகோ எலக்ட்ரிக் தனியார் நிறுவனத்தில் சுமார் 12 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.