உலகக்கிண்ண அவுஸ்திரேலியா இறுதி அணி

உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இறுதி அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் ஒரு மாற்றும் செய்யப்பட்டுள்ளது. உபாதையடைந்துள்ள அஸ்டன் அகர் அணியிலிருந்து நீக்கப்பட்டு மார்கஸ் லபுஷேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் உபாதைக்குள்ளாகியுள்ள ரவிஸ் ஹெட் அணியில் தொடர்கிறார். அவர் முதற் கட்டப் போட்டிகளில் விளையாட முடியாது எனவும், இரண்டாம் கட்டப் போட்டிகளில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு வீரர்களை உபாதையுடன் அணியில் வைத்திருக்க முடியாது. எனவே அஸ்டன் அகரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக் தெரிவுக்குழு தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

அஷ்டன் அகர் நீக்கப்பட்டமை அவுஸ்திரேலியா அணிக்கு சுழற்பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் இந்தியா அணியுடனான இறுதிப் போட்டியில் க்ளன் மக்ஸ்வெல் விக்கெட்களை கைப்பற்றியமை அவரை இரண்டாம் சுழற்பந்து வீச்சாளராக விளையாட முடியும் என்ற நம்பிக்கையினை அவுஸ்திரேலியா அணிக்கு ஏற்படுத்தியுள்ளது. லபுஷேன் அணியில் இணைவது துடுப்பாட்டத்துக்கு பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த 8 போட்டிகளில் 421 ஓட்டங்களை 60.14 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இந்தியாவுடனான தொடரிலும் அவர் சிறப்பாக செயற்பட்டுளளார்.

அணி விபரம்

பட் கம்மின்ஸ், ரவிஸ் ஹெட், டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் க்ரீன், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஷ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

Social Share

Leave a Reply