நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விசாரணை வெளிப்படையாக நடக்கவேண்டும் – அனுர

நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகி நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வெளிப்படையான உண்மையான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயகே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போல அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது உண்மையென்றால் இது ஒரு கவலைக்கிடமான நிலை. நாடாக நாம் எங்கே உள்ளோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதி ஒருவர் அரசாங்கத்துக்கு சார்பில்லாமல் தீர்ப்பு ஒன்றை வழங்கினால் அவருக்கு அச்சுறுத்தல் வழங்கப்படுகிறது என்றால், அது மோசமான ஒரு நிலைமை. நீதிபதி கூறியதில் உண்மை இல்லை என்றால் இதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என நேற்று(30.09) பொலநறுவையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களது மாவட்ட கூட்டத்தில் தனது அதிருப்தியை இவ்வாறு அனுரகுமார திஸாநாயக்கே வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply