எதிர்வரும் நாட்களில் உலகம் பூராகவும் சிரிஞ்சர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸின் அதிபரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை செலுத்துவதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரிஞ்சர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், சிரிஞ்சர்களுக்குத் தற்சமயம் கேள்வி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உலக நாடுகளில் மொத்தம் 6.8 பில்லியன் சிரிஞ்சர்கள் பயன்படுத்தக்கட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.