மின் கட்டணம் அதிகரித்தால், விலை தொடர்பில் சிந்திக்க நேரிடும்!

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தாங்களும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் சிந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக தாம் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply