முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (03.10) நாளையும் (04.10) தமது சேவையில் இருந்து விலக தீர்மானித்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று (02.10) முல்லைத்தீவில் உள்ள சட்டத்தரணிகளும் சேவையில் இருந்து விலக நடவடிக்கை எடுத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உத்தரவிற்கு அமைய, இரு குழுக்கள் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகி வெளிநாடு சென்ற சம்பவம் குறித்து முழு விசாரணைகளை மேற்கொள்ள இன்று (03.10) முல்லைத்தீவு பகுதிக்கு சென்றுள்ளனர்.