தீவிரமாய் பரவும் கண் நோய் – கொழும்பு பாடசாலைகளுக்கு அறிவிப்பு!

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் அதிகமாக பரவி வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் தரம் 6, 7, 8, இல் பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் 4 நாட்களுக்கு பாடசாலை நடைபெற மாட்டாது என மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக இவ்வாறான பல தொற்று நோய்கள் மாணவர்களிடையே பரவி வருகின்றமை தொடர்பிலும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான கண் நோய் தன்மை ஏனைய பாடசாலைகளிலும் அடையாளங்காணப்பட்டால், உடனடியாக அப்பகுதிக்கு உரிய சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு மேல் மாகாண கல்வி திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகம் அதிக அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply