பங்களாதேஷ் அணிக்கெதிராக இங்கிலாந்து அதிரடி

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் ஏழாவது போட்டி
இந்தியா, தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் அதிரடி நிகழ்த்தி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டாவிட் மலான் அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஆறாவது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம 115 ஓட்டங்கள். 17.5 ஓவர்களில் இது பெறப்பட்டது. ஜொனி பார்ஸ்டோவ், டாவிட் மாலன் இந்த எண்ணிக்கையினை பகிர்ந்தனர். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக மலானுடன் இணைந்து ஜோ ரூட் 151 ஓட்டங்களை பகிர்ந்தார். இறுதி நேரத்திலேயே விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

மெஹதி ஹசன் 4 விக்கெட்களையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இருப்பினும் இருவரும் ஓட்டங்களை அதிகமாகவே வழங்கினார்கள்.

இங்கிலாந்து அணி நியுசிலாந்து அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று விளையாடுகிறது.

அணி விபரம்

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மஹேதி ஹசன், ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்BOWLEDஷகிப் அல் ஹசன்525980
டாவிட் மலான்BOWLEDமஹேதி ஹசன்140107165
ஜோ ரூட்பிடி – முஷ்பிகுர் ரஹீம்ஷொரிஃபுல் இஸ்லாம்826881
ஜோஸ் பட்லர்BOWLEDஷொரிஃபுல் இஸ்லாம்201011
ஹரி புரூக்பிடி – லிட்டொன் டாஸ்மஹேதி ஹசன்201530
லியாம் லிவிங்ஸ்டன்BOWLEDஷொரிஃபுல் இஸ்லாம்000100
சாம் கரன்பிடி – நஜ்முல் ஹொசைன்மஹேதி ஹசன்111510
கிறிஸ் வோக்ஸ்பிடி – மஹேதி ஹசன்ரஸ்கின் அஹமட்141120
ஆடில் ரஷிட்பிடி – நஜ்முல் ஹொசைன்மஹேதி ஹசன்11710
மார்க் வூட்  060510
ரீஸ் ரொப்லி  10200
உதிரிகள்  07   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்364   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஸ்ரபைசூர் ரஹ்மான்10007000
ரஸ்கின் அஹமட்06003801
ஷொரிஃபுல் இஸ்லாம்10007503
மஹேதி ஹசன்08007104
ஷகிப் அல் ஹசன்10005201
மெஹிதி ஹசன் மிராஸ்06005500
     
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version