மாணவர்களின் சீருடைக்கும் மதிய உணவிற்கும் நிதி ஒதுக்கப்படும் – கல்வி அமைச்சர்

2030 ஆம் ஆண்டளவில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் மதிய உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மல்லாவி நடுநிலைப் பாடசாலையில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை மதிய உணவு இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களை முன்னெடுக்கும்போது கல்வி நடவடிக்கைகளை இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply