ஆப்கானிஸ்தானில், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,445க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளதுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.