குசல் அடுத்த போட்டியில் விளையாடுவது உறுதி!

குசல் அடுத்த போட்டியில் விளையாடுவது உறுதி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (10.10) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ​​துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குசல் மெண்டிஸ் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளதாகவும், எதிர்வரும் போட்டிகளுக்கு இந்த தசைப்பிடிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 122 ரன்களை பெற்றுக்கொடுத்திருந்தமை விசேடம்சமாகும்.

Social Share

Leave a Reply