தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பத்தாவது போட்டி லக்னோவில் ஆரம்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளன. தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியுடன் சாதனையுடனான வெற்றியினை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
அவுஸ்திரேலியா அணி இன்று மீள் வருகை ஒன்றுக்காக முயற்சிக்கும். இரண்டு பலமான அணிகள் மோதும் இன்றைய போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கபப்டுகிறது.
இன்றுடன் முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவுக்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், அலெக்ஸ் கேரி,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா (தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ரப்ரைஸ் ஷம்ஸி
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
நியூசிலாந்து | 02 | 02 | 00 | 00 | 04 | 1.958 |
இந்தியா | 02 | 02 | 00 | 00 | 04 | 1.500 |
பாகிஸ்தான் | 02 | 02 | 00 | 00 | 04 | 0.927 |
தென்னாபிரிக்கா | 01 | 01 | 00 | 00 | 02 | 2.040 |
இங்கிலாந்து | 02 | 01 | 01 | 00 | 02 | 0.553 |
பங்களாதேஷ் | 02 | 01 | 01 | 00 | 02 | -0.653 |
அவுஸ்திரேலியா | 01 | 00 | 01 | 00 | 00 | -0.883 |
இலங்கை | 02 | 00 | 02 | 00 | 00 | -1.161 |
நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.800 |
ஆப்கானிஸ்தான் | 02 | 00 | 02 | 00 | 00 | -1.907 |