இன்றும் பல இடங்களில் மழை!

இன்று (13.10) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வாநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Social Share

Leave a Reply