இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜோர்டான் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலிற்குள் செல்ல முயன்ற போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் உறுதிசெய்துள்ளது.