பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டியில் இந்தியா அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சில் சுருண்டது.

192 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 30 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

வேகமாக ஆரம்பித்த சுப்மன் கில் வேகமாகவே ஆட்டமிழந்தார். அதன் பொன்னர் ரோஹித் ஷர்மா, விராத் கோலி ஆகியோர் 56 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் கோலி ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்திய ரோஹித் ஷர்மா ஓட்டங்களை பெற்று இந்தியா அணியின் வெற்றியினை இலகுவாக்கினார். ரோஹித்தின் அதிரடிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கைகொடுத்து இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினார். இருவரும் 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த வேளையில் ரோஹித் அவசரப்பட்ட தேவையயற்ற துடுப்பாட்டம் மூலம் ஆட்டமிழந்து சத வாய்ப்பை இழந்தார்.

ரோஹித ஆட்டமிழந்த பின்னர் நிதானமாக ஷ்ரேயாஸ் ஐயர் துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி இந்தியா அணியினை தடுமாற வைத்தனர் என்று சொல்லக்கூடியளவில் எவரும் பந்துவீசவில்லை.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற மொஹமட் சிராஜ் தடுத்து அபத்துல்லா சபீக்கின் விக்கெட்டை தர்காத்தார். சிறிது இடைவேளையில் பாண்ட்யாவின் பந்துவீச்சில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பபர் அஷாம், முஹமட் ரிஷ்வான் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அணியினை மீட்டனர். 82 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்து பபர் அஸாமின் விக்கெட்டை மொஹமட் சிராஜ் கைப்பற்றினார். அந்த விக்கெட்டோடு மேலும் நான்கு விக்கெட்கள் 16 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அத்தோடு பாகிஸ்தான் அணி தடுமாறிப்போனது. 36 ஓட்டங்களுக்கு இறுதி 08 விக்கெட்ளை பாகிஸ்தான் அணி இழந்தது.

இந்த தோல்வியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றி புள்ளி வைத்தல் எனும் கனவு தகர்ந்து போனது. இந்தியா அணி உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றுள்ளது.

1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் நேரடியாக மைதானத்தில் பார்வையிட்ட இந்தப் போட்டியில் இந்தியா ஆக்ரோஷமாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி 425 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

குல்தீப் யாதவ் இறுக்கமாக அதிகமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ் ஓட்டங்களை வழங்கிய போதும் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களை தகர்த்துக் கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட பும்ரா அதனை தொடர்நது விக்கெட்களை தகர்த்தார். ரவீந்தர் ஜடேஜா இறுதி நேரத்தில் தனது கைவரிசையினை காட்டினார்.

இந்த வெற்றி இந்தியா அணிக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோஹித் ஷர்மாபிடி – இப்திகார் அகமட்ஷஹீன் அப்ரிடி866366
சுப்மன் கில்பிடி – ஷதாப் கான்ஷஹீன் அப்ரிடி161140
விராத் கோலிபிடி – மொஹமட் நவாஸ்ஹசன் அலி161830
ஷ்ரேயாஸ் ஐயர்  536232
லோகேஷ் ராகுல்  192920
      
       
       
       
       
       
உதிரிகள்  02   
ஓவர்  30.3விக்கெட்  03மொத்தம்192   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி06003602
ஹசன் அலி06003401
மொஹமட் நவாஸ்8.3004700
ஹரிஸ் ரவூப்06004300
ஷதாப் கான்04003100
     
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா ஷபிக்L.B.Wமொஹமட் சிராஜ்202430S
இமாம் உல் ஹக்பிடி – லோகேஷ் ராகுல்ஹார்டிக் பாண்ட்யா363860
பபர் அசாம்Boweldமொஹமட் சிராஜ்505870
மொஹமட்  ரிஸ்வான்Boweldஜஸ்பிரிட் பும்ரா496970
சவுத் ஷகீல்L.B.Wகுல்தீப் யாதவ்061000
இப்திகார் அகமட்Bowledகுல்தீப் யாதவ்040410
ஷதாப் கான்Boweldஜஸ்பிரிட் பும்ரா020500
மொஹமட் நவாஸ்பிடி – ஜஸ்பிரிட் பும்ராஹார்டிக் பாண்ட்யா041400
ஹசன் அலிபிடி – சுப்மன் கில்ரவீந்தர் ஜடேஜா1219020
ஷஹீன் அப்ரிடி.  021000
ஹரிஸ் ரவூப்L.B.Wரவீந்தர் ஜடேஜா020600
உதிரிகள்  04   
ஓவர்  42.5விக்கெட்  10மொத்தம்191   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா07011902
மொஹமட் சிராஜ்08005002
ஹார்டிக் பாண்ட்யா06003402
குல்தீப் யாதவ்10003502
ரவீந்தர் ஜடேஜா9.5003802
ஷர்டூல் தாகூர்02001200

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா03030000061.821
நியூசிலாந்து03030000061.604
தென்னாபிரிக்கா02020000042.360
பாகிஸ்தான்0302010004-0.137
இங்கிலாந்து02010100020.553
பங்களாதேஷ்0301020002-0.699
இலங்கை0200020000-1.161
நெதர்லாந்து0200020000-1.800
அவுஸ்திரேலியா0200020000-1.846
ஆப்கானிஸ்தான்0200020000-1.907
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version