இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன ஆகியோர் திங்கட்கிழமை அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடமாட்டார்கள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை என எஅறியமுடிகிறது.
இன்று அவர்கள் பயிற்சிகளில் ஈடுப்படவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் அவர்களது உபாதைகள் தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும், நாளை மாலை அளவிலேயே அது தொடர்பில் கூற முடியுமெனவும் இலங்கை அணி சார்பான முக்கிய தகவல் ஒன்றின் மூலம் அறிய முடிகிறது.
தஸூன் சாணக்க மூன்று வாரங்களுக்கு விளையாடமாட்டார் என்பதும், மதீஸ பத்திரன மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்பதும் உறுதியான தகவல்கள் இல்லை எனவும், அதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் மேலும் அறிய முடிகிறது.
இலங்கை கிரிக்கெட் இந்த விடயங்கள் தடர்பில் எந்தவித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
-விமல்-