
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டியில் இந்தியா அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சில் சுருண்டது.
192 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 30 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
வேகமாக ஆரம்பித்த சுப்மன் கில் வேகமாகவே ஆட்டமிழந்தார். அதன் பொன்னர் ரோஹித் ஷர்மா, விராத் கோலி ஆகியோர் 56 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் கோலி ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்திய ரோஹித் ஷர்மா ஓட்டங்களை பெற்று இந்தியா அணியின் வெற்றியினை இலகுவாக்கினார். ரோஹித்தின் அதிரடிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கைகொடுத்து இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினார். இருவரும் 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த வேளையில் ரோஹித் அவசரப்பட்ட தேவையயற்ற துடுப்பாட்டம் மூலம் ஆட்டமிழந்து சத வாய்ப்பை இழந்தார்.
ரோஹித ஆட்டமிழந்த பின்னர் நிதானமாக ஷ்ரேயாஸ் ஐயர் துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி இந்தியா அணியினை தடுமாற வைத்தனர் என்று சொல்லக்கூடியளவில் எவரும் பந்துவீசவில்லை.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற மொஹமட் சிராஜ் தடுத்து அபத்துல்லா சபீக்கின் விக்கெட்டை தர்காத்தார். சிறிது இடைவேளையில் பாண்ட்யாவின் பந்துவீச்சில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பபர் அஷாம், முஹமட் ரிஷ்வான் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அணியினை மீட்டனர். 82 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்து பபர் அஸாமின் விக்கெட்டை மொஹமட் சிராஜ் கைப்பற்றினார். அந்த விக்கெட்டோடு மேலும் நான்கு விக்கெட்கள் 16 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அத்தோடு பாகிஸ்தான் அணி தடுமாறிப்போனது. 36 ஓட்டங்களுக்கு இறுதி 08 விக்கெட்ளை பாகிஸ்தான் அணி இழந்தது.
இந்த தோல்வியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றி புள்ளி வைத்தல் எனும் கனவு தகர்ந்து போனது. இந்தியா அணி உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றுள்ளது.
1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் நேரடியாக மைதானத்தில் பார்வையிட்ட இந்தப் போட்டியில் இந்தியா ஆக்ரோஷமாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி 425 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
குல்தீப் யாதவ் இறுக்கமாக அதிகமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ் ஓட்டங்களை வழங்கிய போதும் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களை தகர்த்துக் கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட பும்ரா அதனை தொடர்நது விக்கெட்களை தகர்த்தார். ரவீந்தர் ஜடேஜா இறுதி நேரத்தில் தனது கைவரிசையினை காட்டினார்.
இந்த வெற்றி இந்தியா அணிக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோஹித் ஷர்மா | பிடி – இப்திகார் அகமட் | ஷஹீன் அப்ரிடி | 86 | 63 | 6 | 6 |
| சுப்மன் கில் | பிடி – ஷதாப் கான் | ஷஹீன் அப்ரிடி | 16 | 11 | 4 | 0 |
| விராத் கோலி | பிடி – மொஹமட் நவாஸ் | ஹசன் அலி | 16 | 18 | 3 | 0 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | 53 | 62 | 3 | 2 | ||
| லோகேஷ் ராகுல் | 19 | 29 | 2 | 0 | ||
| உதிரிகள் | 02 | |||||
| ஓவர் 30.3 | விக்கெட் 03 | மொத்தம் | 192 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஷஹீன் அப்ரிடி | 06 | 00 | 36 | 02 |
| ஹசன் அலி | 06 | 00 | 34 | 01 |
| மொஹமட் நவாஸ் | 8.3 | 00 | 47 | 00 |
| ஹரிஸ் ரவூப் | 06 | 00 | 43 | 00 |
| ஷதாப் கான் | 04 | 00 | 31 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | L.B.W | மொஹமட் சிராஜ் | 20 | 24 | 3 | 0S |
| இமாம் உல் ஹக் | பிடி – லோகேஷ் ராகுல் | ஹார்டிக் பாண்ட்யா | 36 | 38 | 6 | 0 |
| பபர் அசாம் | Boweld | மொஹமட் சிராஜ் | 50 | 58 | 7 | 0 |
| மொஹமட் ரிஸ்வான் | Boweld | ஜஸ்பிரிட் பும்ரா | 49 | 69 | 7 | 0 |
| சவுத் ஷகீல் | L.B.W | குல்தீப் யாதவ் | 06 | 10 | 0 | 0 |
| இப்திகார் அகமட் | Bowled | குல்தீப் யாதவ் | 04 | 04 | 1 | 0 |
| ஷதாப் கான் | Boweld | ஜஸ்பிரிட் பும்ரா | 02 | 05 | 0 | 0 |
| மொஹமட் நவாஸ் | பிடி – ஜஸ்பிரிட் பும்ரா | ஹார்டிக் பாண்ட்யா | 04 | 14 | 0 | 0 |
| ஹசன் அலி | பிடி – சுப்மன் கில் | ரவீந்தர் ஜடேஜா | 12 | 19 | 02 | 0 |
| ஷஹீன் அப்ரிடி. | 02 | 10 | 0 | 0 | ||
| ஹரிஸ் ரவூப் | L.B.W | ரவீந்தர் ஜடேஜா | 02 | 06 | 0 | 0 |
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 42.5 | விக்கெட் 10 | மொத்தம் | 191 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜஸ்பிரிட் பும்ரா | 07 | 01 | 19 | 02 |
| மொஹமட் சிராஜ் | 08 | 00 | 50 | 02 |
| ஹார்டிக் பாண்ட்யா | 06 | 00 | 34 | 02 |
| குல்தீப் யாதவ் | 10 | 00 | 35 | 02 |
| ரவீந்தர் ஜடேஜா | 9.5 | 00 | 38 | 02 |
| ஷர்டூல் தாகூர் | 02 | 00 | 12 | 00 |
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 03 | 03 | 00 | 00 | 06 | 1.821 |
| நியூசிலாந்து | 03 | 03 | 00 | 00 | 06 | 1.604 |
| தென்னாபிரிக்கா | 02 | 02 | 00 | 00 | 04 | 2.360 |
| பாகிஸ்தான் | 03 | 02 | 01 | 00 | 04 | -0.137 |
| இங்கிலாந்து | 02 | 01 | 01 | 00 | 02 | 0.553 |
| பங்களாதேஷ் | 03 | 01 | 02 | 00 | 02 | -0.699 |
| இலங்கை | 02 | 00 | 02 | 00 | 00 | -1.161 |
| நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.800 |
| அவுஸ்திரேலியா | 02 | 00 | 02 | 00 | 00 | -1.846 |
| ஆப்கானிஸ்தான் | 02 | 00 | 02 | 00 | 00 | -1.907 |