
இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்க உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். உபாதை காரணமாக அவருக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வலது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மூன்று வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.