தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு.

தலைமன்னார் உருமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16.10.) இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில்,04 கிலோவுக்கும் அதிகமானஐஸ்போதைப்பொருள்,01 கிலோ ஹெரோயின்,மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கடல் மற்றும் கரையோர வலயங்களுக்குள் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கடற்படையினர் தொடர்ச்சியாகத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக இன்று (16/10) அதிகாலை தலைமன்னார் உருமலைக் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்துக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ரூபா, 94 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள்,மற்றும் படகு, என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply