
தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டியில் மாபெரும் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும், நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இது அவர்களின் மூன்றாவது உலகக்கிண்ண வெற்றி. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பதினோராவது வெற்றி. தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் வெற்றி. நெதர்லாந்து அணி சிம்பாவே, அயர்லாந்து அணிகளுக்கெதிராக தலா 3 வெற்றிகள், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக 2 வெற்றிகள், பங்களாதேஷ் அணிக்கெதிராக 1 வெற்றி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 1 வெற்றி என நெதர்லாந்து அணி முழு அங்கத்துவ நாடுகளை வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணத்தில் நபீபியா, மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை வெற்றி பெற்றுள்ளது.
246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி மெதுவான ஆரம்பத்தை பெற்றது. அடுத்தடுத்து இரண்டு சதங்களை பெற்ற குயின்டன் டி கொக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்ந்தன.
முதல் விக்கெட் 37 ஓட்டங்களில் வீழ்த்தப்பட 44 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்கள் என்ற நிலை உருவானது. ஹென்றிச் க்ளாஸன், டேவிட் மில்லர் ஆகியோர் இணைந்து அணியை மீட்க 45 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிய இணைப்பாடங்கள் உருவாக்கப்பட்டன. டேவிட் மில்லர் ஆட்டமிழந்ததும் தென்னாபிரிக்க அணியின் தோல்வி உறுதியானது.
தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நெதர்லாந்து அணியின் சகல பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகவே பந்துவீசினார்கள். தென்னாபிரிக்கா அணிக்கும் மழைக்கும் இவ்வாறன அதிர்ச்சி தோல்விகளுக்கு அப்படி ஒரு சம்மந்தம் தொடர்கிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பைதெரிவு செய்தது. மழை காரணமாக 43 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது.
நெதர்லாந்து அணியின் ஆரம்ப விக்கட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட நிலையிலும் இறுதி நேர துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பாடி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றனர். குறிப்பாக அணியின் தலைவர் ஸ்கொட் எட்வெர்ட்ஸ் ஏழாமிலக்கத்தில் சிறப்பாக துடுப்பாடி 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். சராசரியான இணைப்பாட்டஙகள் மூலம் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம் 64 ஓட்டங்களையும், ஒன்பதாவது விக்கெட் இணைப்பாட்டம் முறியடிக்கப்படாத 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தது. இந்த இணைப்பாடங்களே வெற்றி இணைப்பாட்டங்களாக அமைந்தன.
நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்கா அணி சார்பாக மார்க்கோ ஜனேசன் இறுக்கமாக பந்துவீசினார். கேஷவ் மஹாராஜ் ஓட்டங்களை அதிகமாக வழங்கவில்லை. ஏனையவர்கள் விக்கெட்களை கைப்பற்றிய போதும் ஓட்டங்களை அதிகமாக வழங்கியிருந்தனர்.
துடுப்பாட்டம், பந்துவீச்சு என அதிரடியாக உலகக்கிண்ண தொடரை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் கவிழ்ந்து கொட்டியுள்ளது.
மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. நெதர்லாந்து அணி ஒன்பதாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரெம்பா பவுமா | Bowled | ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 16 | 31 | 2 | 1 |
| குயின்டன் டி கொக் | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | கொலின் அக்கர்மன் | 20 | 22 | 3 | 0 |
| ரஷி வன் டேர் டுசென் | பிடி – ஆர்யன் டட் | ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 04 | 07 | 0 | 0 |
| எய்டன் மார்க்ரம் | Bowled | போல் வான் மீகெரென் | 01 | 03 | 0 | 0 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | பிடி – விக்ரம் சிங் | லோகன் வன் பீக் | 28 | 28 | 4 | 0 |
| டேவிட் மில்லர் | Bowled | லோகன் வன் பீக் | 43 | 52 | 4 | 1 |
| மார்கோ ஜன்சன் | Bowled | போல் வான் மீகெரென் | 09 | 25 | 0 | 0 |
| ஜெரால்ட் கோட்ஸிலி | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | பஸ் ட லீட் | 22 | 23 | 2 | 1 |
| கேசவ் மகராஜ் | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | லோகன் வன் பீக் | 40 | 37 | 5 | 1 |
| ககிசோ ரபாடா | பிடி – சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | பஸ் ட லீட் | 09 | 06 | 0 | 1 |
| லுங்கி நிகிடி | 07 | 24 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 42.5 | விக்கெட் 10 | மொத்தம் | 207 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 05 | 01 | 19 | 00 |
| லோகன் வன் பீக் | 8.5 | 00 | 60 | 03 |
| கொலின் அக்கர்மன் | 03 | 00 | 16 | 01 |
| போல் வான் மீகெரென் | 09 | 00 | 40 | 02 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 09 | 00 | 34 | 02 |
| பஸ் ட லீட் | 08 | 00 | 36 | 02 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| விக்ரம் சிங் | பிடி – ஹெய்ன்ரிச் கிளாசன் | ககிசோ ரபாடா | 02 | 16 | 0 | 0 |
| மக்ஸ் ஓ டொவ்ட் | பிடி – குயின்டன் டி கொக் | மார்கோ ஜனேசன் | 18 | 25 | 4 | 0 |
| கொலின் அக்கர்மன் | Bowled | ஜெரால்ட் கோட்ஸிலி | 12 | 25 | 1 | 0 |
| பஸ் டி லீட் | L.B.W | ககிசோ ரபாடா | 02 | 07 | 0 | 0 |
| சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | பிடி – மார்கோ ஜனேசன் | லுங்கி நிகிடி | 19 | 37 | 1 | 1 |
| தேஜா நிடமனுரு | L.B.W | மார்கோ ஜனேசன் | 20 | 25 | 3 | 0 |
| ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | 78 | 69 | 10 | 1 | ||
| லோகன் வன் பீக் | Stump – குயின்டன் டி கொக் | கேசவ் மகராஜ் | 10 | 27 | 1 | 0 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | பிடி – குயின்டன் டி கொக் | லுங்கி நிகிடி | 29 | 19 | 3 | 1 |
| ஆர்யன் டட் | 23 | 09 | 0 | 3 | ||
| உதிரிகள் | 32 | |||||
| ஓவர் 43 | விக்கெட் 08 | மொத்தம் | 245 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| லுங்கி நிகிடி | 09 | 01 | 57 | 02 |
| மார்கோ ஜனேசன் | 08 | 01 | 27 | 02 |
| ககிசோ ரபாடா | 09 | 01 | 56 | 02 |
| ஜெரால்ட் கோட்ஸிலி | 08 | 00 | 57 | 01 |
| கேசவ் மகராஜ் | 09 | 00 | 38 | 01 |
அணி விபரம்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா (தலைவர்), குயின்டன்டி கொக், மார்கோ ஜென்சன், ஹெய்ன்ரிச் கிளாசன்,கேசவ் மகராஜ், எய்டன்மார்க்ரம், டேவிட் மில்லர்,லுங்கி நிகிடி, ககிசோரபாடா, ரஷி வன் டேர் டுசென்,ஜெரால்ட் கோட்ஸிலி
ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், ஷகிப் சுல்பிகார்.
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 03 | 03 | 00 | 00 | 06 | 1.841 |
| நியூசிலாந்து | 03 | 03 | 00 | 00 | 06 | 1.604 |
| தென்னாபிரிக்கா | 03 | 02 | 01 | 00 | 04 | 1.385 |
| பாகிஸ்தான் | 03 | 02 | 01 | 00 | 04 | -0.137 |
| இங்கிலாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.084 |
| ஆப்கானிஸ்தான் | 03 | 01 | 02 | 00 | 02 | -0.652 |
| பங்களாதேஷ் | 03 | 01 | 02 | 00 | 02 | -0.699 |
| அவுஸ்திரேலியா | 03 | 01 | 02 | 00 | 02 | -0.734 |
| நெதர்லாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.993 |
| இலங்கை | 03 | 00 | 03 | 00 | 00 | -1.532 |