கிருலப்பனை பகுதியில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், இவ்வாறு நடைபெற்றதற்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.