ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (20.10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகர் முன்னிலையில் உண்மைகளை முன்வைப்பதற்காக டயானா கமகே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.