தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 20 ஆவது போட்டி ஆரம்பித்துள்ளது. மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள போட்டியில், நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்கா அணி 2 வெற்றிகளைப் பெற்று இறுதியாக நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி 2 தோல்விகளை அடைந்து பங்களாதேஷ் அணியை வென்றுள்ளது. ஆப்கானிஸ்தானிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டு அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இரு அணிகளும் மோதும் போட்டி இது. இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இது.
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் ரெம்பா பவுமா சுகயீனம் காரணமாக இன்று விளையாடவில்லை. எய்டன் மார்க்ராம் அணி தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். ரீஷா ஹென்றிக்ஸ் அணியில் இடம்பிடித்துளார்.
இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
க்றிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன்
தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
நியூசிலாந்து | 04 | 04 | 00 | 00 | 08 | 1.923 |
இந்தியா | 04 | 04 | 00 | 00 | 08 | 1.659 |
தென்னாபிரிக்கா | 03 | 02 | 01 | 00 | 04 | 1.385 |
அவுஸ்திரேலியா | 04 | 02 | 02 | 00 | 04 | -0.193 |
பாகிஸ்தான் | 04 | 02 | 02 | 00 | 04 | -0.456 |
இங்கிலாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.084 |
பங்களாதேஷ் | 04 | 01 | 03 | 00 | 02 | -0.784 |
நெதர்லாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.993 |
ஆப்கானிஸ்தான் | 04 | 01 | 03 | 00 | 02 | -1.250 |
இலங்கை | 03 | 00 | 03 | 00 | 00 | -1.532 |