வீடு திரும்பினார் டயானா கமகே!

பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21.10) காலை வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று 3 மணி நேரத்துக்குப் பிறகு அவர் வெளியேறியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்ற வளாகத்தில் தனது கழுத்தை நெரித்ததாக கூறி அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply