
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 20 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.
மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 400 ஓட்டங்களை துரத்தி இரண்டாவதாக துடுப்பாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணிக்கெதிராக பிறிதொரு அணி பெற்றுக்கொண்ட பெரிய வெற்றி என்ற சாதனை தென்னாபிரிக்க வசமானது.
இங்கிலாந்து அணி துட்டுப்பாட்டத்தை ஆரம்பித்தது முதல் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. தென்னாபிரிக்கா அணியின் சகல பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்துவீசினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி மூன்றாமிடத்தை தக்க வைத்துள்ளது. இங்கிலாந்து அணி ஒன்பதாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றது. தென்னாபிரிக்கா முதல் விக்கெட்டினை வேகமாக இழந்த போதும் இன்றைய போட்டிக்கு சேர்க்கபப்ட்ட ரீஷா ஹென்றிக்ஸ் சிறப்பாக துடுப்பாடி நல்ல ஆரம்பத்தை வழங்கினார். அவரோடு ரஸ்ஸி வன் டேர் டுஸ்ஸன் இணைந்து 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஹெய்ன்ரிச் கிளாசன், மார்கோ ஜன்சன் ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். ஹெய்ன்ரிச் கிளாசன்அதிரடியாக துடுப்பாடி 61 ஒரு பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். மார்கோ மார்கோ ஜன்சன் அவரது உலககிண்ணத்தில் முதலாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார்.
இங்கிலாந்து அணி பந்துவீச்சில் நடுப்பகுதியில் இறுக்கம் ஒன்றை வழங்கியது. தென்னாபிரிக்கா அணி அடுத்தடுத்து சிறிய இடைவேளைகளில் விக்கெட்களை இழந்தது. அதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கை குறைந்தது. இருப்பினும் இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை உயர்த்தியது.
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் ரெம்பா பவுமா சுகயீனம் காரணமாக இன்று விளையாடவில்லை. எய்டன் மார்க்ராம் அணி தலைமை பொறுப்பை ஏற்று வெற்றியினை பெற்றுக் கொடுத்தார். ரீஷா ஹென்றிக்ஸ் அணியில் இடம்பிடித்துளார்.
இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். க்றிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன்
தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஜொனி பார்ஸ்டோவ் | பிடி – ரஷி வன் டேர் டுசென் | லுங்கி நிகிடி | 10 | 12 | 1 | 1 |
| டாவிட் மலான் | பிடி – குயின்டன் டி கொக் | மார்கோ ஜனேசன் | 06 | 11 | 1 | 0 |
| ஜோ ரூட் | பிடி – டேவிட் மில்லர் | மார்கோ ஜனேசன் | 02 | 06 | 0 | 0 |
| பென் ஸ்டோக்ஸ் | பிடி – ககிசோ ரபாடா | ககிசோ ரபாடா | 05 | 08 | 1 | 0 |
| ஹரி புரூக் | L.B.W | ஜெரால்ட் கோட்ஸிலி | 17 | 25 | 2 | 1 |
| ஜோஸ் பட்லர் | பிடி – குயின்டன் டி கொக் | ஜெரால்ட் கோட்ஸிலி | 15 | 07 | 2 | 1 |
| டேவிட் வில்லி | பிடி -ககிசோ ரபாடா | லுங்கி நிகிடி | 12 | 12 | 1 | 1 |
| ஆடில் ரஷிட் | பிடி -ரீஷா ஹென்றிக்ஸ் | ஜெரால்ட் கோட்ஸிலி | 10 | 12 | 1 | 0 |
| கஸ் அட்கின்ஷன் | Bowled | கேசவ் மகராஜ் | 35 | 21 | 7 | 0 |
| மார்க் வூட் | 43 | 17 | 2 | 5 | ||
| ரீஸ் ரொப்லி | Absent Hurt | |||||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 22 | விக்கெட் 10 | மொத்தம் | 170 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| லுங்கி நிகிடி | 05 | 01 | 26 | 02 |
| மார்கோ ஜனேசன் | 05 | 00 | 35 | 02 |
| ககிசோ ரபாடா | 06 | 01 | 38 | 01 |
| ஜெரால்ட் கோட்ஸிலி | 04 | 00 | 35 | 03 |
| கேசவ் மகராஜ் | 02 | 00 | 27 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | பிடி – ஜோஸ் பட்லர் | ரீஸ் ரொப்லி | 04 | 02 | 1 | 0 |
| ரீஷா ஹென்றிக்ஸ் | Bowled | ஆடில் ரஷிட் | 85 | 75 | 9 | 3 |
| ரஷி வன் டேர் டுசென் | பிடி – ஜோனி பார்ஸ்டோவ் | ஆடில் ரஷிட் | 60 | 61 | 8 | 0 |
| எய்டன் மார்க்ரம் | பிடி – ஜோனி பார்ஸ்டோவ் | ரீஸ் ரொப்லி | 42 | 44 | 4 | 0 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | Bowled | கஸ் அட்கின்ஷன் | 109 | 67 | 12 | 4 |
| டேவிட் மில்லர் | பிடி – பென் ஸ்டோக்ஸ் | ரீஸ் ரொப்லி | 05 | 06 | 1 | 0 |
| மார்கோ ஜன்சன் | 75 | 42 | 3 | 6 | ||
| ஜெரால்ட் கோட்ஸிலி | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | கஸ் அட்கின்ஷன் | 03 | 03 | 0 | 0 |
| கேசவ் மகராஜ் | ||||||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 10 | மொத்தம் | 399 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ரீஸ் ரொப்லி | 8.5 | 00 | 88 | 03 |
| டேவிட் வில்லி | 09 | 01 | 61 | 00 |
| ஜோ ரூட் | 6.1 | 00 | 48 | 00 |
| கஸ் அட்கின்ஷன் | 09 | 00 | 60 | 02 |
| மார்க் வூட் | 07 | 00 | 76 | 00 |
| ஆடில் ரஷிட் | 10 | 00 | 61 | 02 |