கொழும்பு – பதுளை பிரதான வீதியில் வாகன நெரிசல்!

இன்று (21.10) பிற்பகல் மண்சரிவினால் தடைப்பட்ட கொழும்பு பதுளை பிரதான வீதியில், தற்போது வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையை மாத்திரம் திறந்துவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் மழை காரணமாக பெரகல மற்றும் ஹப்புத்தளைக்கு இடையிலான வீதி இன்று பிற்பகல் மண்சரிவினால் பல இடங்களில் தடைப்பட்டுள்ளது.

மேலும் வீதியின் குறுக்கே பெரிய வெள்ளம் பாய்ந்தோடியதால் மக்கள் பலர் சிரமப்பட்டுள்ளனர்.

இந்த வீதியில் மேலும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும், தாழ்வான பகுதிகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக சாரதிகள் வீதியை பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply