
பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 23 போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
பங்களாதேஷ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி 3 போட்டிகளில் தோல்வி என்னும் நிலைமையில் ஏழாமிடத்திலும் தென்னாபிரிக்கா அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 1 தோல்வியை சந்தித்து மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.
அணி விபரம்
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், ஹசன் மஹ்முட் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, நசும் அஹமட் , முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்
தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, லிசாட் வில்லியம்ஸ்