ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அதனை கவிழ்க்க முடியும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் திறனும் அவர்களுக்கு இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போதைக்கு அதை செய்ய மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை நீக்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செய்யக்கூடிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.