மன்னார், நானாட்டான் மன் /சிவராஜா இந்து வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்வுகள் பரிசளிப்பு என்பன இன்று( 24.10) செவ்வாய் ,காலை 10:15 மணிக்கு பாடசாலை அதிபர் A.R அமலதாசன் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக நானாட்டான் பிரதேச செயலாளர் M. ஶ்ரீஸ்கந்தகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக, T.ஜெகநாதன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் A.I தயானந்தராஜா ஓய்வு பெற்ற அதிபர் மன்/சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் சட்டத்தரணி டினேஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கெளரவ விருந்தினர்களாக G.V கதிரேசன் குருக்கள் செல்வ முத்துமாரியம்மன் ஆலயம், நானாட்டான்.வண, பிதா சுரேந்திரன் றெவல் பங்குத்தந்தை புனித ஆரோக்கிய மாதா ஆலயம்,நானாட்டான்.S.A.சுஹைப் மெளலவி,அறுகுக்குன்று, ஏனைய அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள்
கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்