தென்னாபிரிக்கா அபார வெற்றி. இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்.

தென்னாபிரிக்கா அபார வெற்றி. இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்.

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடயில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 23 போட்டியில் தென்னாபிரிக்கா அணி பெரிய வெற்றி ஒன்றை பெற்றுள்ளது.

மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 149 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

383 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதல் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்களை வேகமாக இழந்தது. மஹமதுல்லா மாத்திரம் சிறப்பாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஏனையோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். சதத்தையும் பூர்த்தி. போற்றப்படவேண்டிய அபார சதமாகும்.

தென்னாபிரிக்கா அணி சார்பாக சகல பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து சிறந்த அதிரடி துடுப்பாட்டம் மூலம் பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றது. 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 382 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. இந்த தொடரில் மூன்றாவது தடவையாக 350 ஓட்டங்களை தாண்டியுயுள்ளனர்.

ஆரம்ப இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட நிலையில் குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ராம் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அணியை மீட்டு சிறந்த நிலைக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய குயின்டன் டி கொக் சதத்தை பூர்த்தி செய்தார்.இந்த உலகக்கிண்ண தொடரில் இது அவரின் மூன்றாவது சதமாகும். சதம் பூர்த்தி செய்த பின்னர் அதிரடியாக துடுப்பப்படி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஹென்றிச் க்ளாஸான் அதிரடியாக துடுப்பாடினார்.
க்ளாஸான் மற்றும் டேவிட் மில்லர் 20 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்று இந்த உலகக்கிண்ணத்தின் வேகமான அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர்.

பங்களாதேஷ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி 4 போட்டிகளில் தோல்வி என்னும் நிலைமையில் பத்தாமிடத்துக்கு பின் சென்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 1 தோல்வியை சந்தித்து இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரன்ஷித் ஹசன் தமீம்பிடி- ஹெய்ன்ரிச் கிளாசன்மார்கோ ஜனேசன்121710
லிட்டொன்  டாஸ்L.B.Wககிசோ ரபாடா224431
நஜ்முல் ஹொசைன் சாண்டோபிடி- ஹெய்ன்ரிச் கிளாசன்மார்கோ ஜனேசன்000100
ஷகிப் அல் ஹசன்பிடி- ஹெய்ன்ரிச் கிளாசன்லிசாட் வில்லியம்ஸ்010400
முஷ்பிகுர் ரஹீம்பிடி- அன்டில் பெலுக்குவாயோஜெரால்ட் கோட்ஸிலி081710
மஹ்மதுல்லாபிடி-ஜெரால்ட் கோட்ஸிலி1111111104
மெஹிதி ஹசன் மிராஸ்பிடி- அன்டில் பெலுக்குவாயோகேசவ் மகராஜ்111910
நசும் அஹமட்பிடி- ஜெரால்ட் கோட்ஸிலிஜெரால்ட் கோட்ஸிலி191930
ஹசன் மஹ்முட்பிடி- ஜெரால்ட் கோட்ஸிலிககிசோ ரபாடா152520
முஸ்ரபைசூர் ரஹ்மான் பிடி- டேவிட் மில்லர் லிசாட் வில்லியம்ஸ்112120
ஷொரிஃபுல் இஸ்லாம்  060410
உதிரிகள்  17   
ஓவர்  46.4விக்கெட்  10மொத்தம்233   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மார்கோ ஜனேசன்08003902
லிசாட் வில்லியம்ஸ்8.4015602
ஜெரால்ட் கோட்ஸிலி10006203
ககிசோ ரபாடா10014202
கேசவ் மகராஜ்10003201
     
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி –நசும் அஹமட்ஹசன் மஹ்முட்174140157
ரீஷா ஹென்றிக்ஸ் Bowledஷொரிபுல் இஸ்லாம்121910
ரஷி வன் டேர் டுசென்L.B.Wமெஹிதி ஹசன் மிராஸ்010700
எய்டன் மார்க்ரம்பிடி –லிட்டொன் டாஸ்ஷகிப் அல் ஹசன்606970
ஹெய்ன்ரிச் கிளாசன்பிடி – மஹ்மதுல்லாஹசன் மஹ்முட்904928
டேவிட் மில்லர் 341514
மார்கோ ஜன்சன்  010100
ஜெரால்ட் கோட்ஸிலி      
கேசவ் மகராஜ்      
       
       
உதிரிகள்  10   
ஓவர்  50விக்கெட்  05மொத்தம்382   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஸ்ரபைசூர் ரஹ்மான்09007600
மெஹிதி ஹசன் மிராஸ்09004400
ஷொரிபுல் இஸ்லாம்09007601
ஷகிப் அல் ஹசன்09006901
ஹசன் மஹ்முட்06006702
நசும் அஹமட்05002700
மஹ்மதுல்லா03002000

அணி விபரம்

பங்காளதேஷ் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(தலைவர்), லிட்டொன் டாஸ், ஹசன் மஹ்முட் , ரன்ஷித் ஹசன், தௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, நசும் அஹமட் , முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்

தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா05050000101.353
தென்னாபிரிக்கா05040100082.370
நியூசிலாந்து05040100081.481
அவுஸ்திரேலியா0402020004-0.193
பாகிஸ்தான்0502030004-0.456
ஆப்கானிஸ்தான்0502030004-1.250
நெதர்லாந்து0401030002-0.790
இலங்கை0401030002-1.048
இங்கிலாந்து0401020002-1.248
பங்களாதேஷ்0501040002-1.253
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version