
உபாதையடைந்த மதீஷ பத்திரனவுக்கு பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
மதீஷ பத்திரன உலகக்கிண்ண தொடரில் விளையாட முடியாத நிலையில் அவருக்கு மாற்றீடாக அஞ்சலோ மத்தியூஸை இணைக்க சர்வதேசக் கிரிக்கெட் பேரவையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அணி சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது மாற்றம் இதுவாகும். ஏற்கனவே தஸூன் சாணக்க நீக்கப்பட்டு சாமிக கருணாரட்ன அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
கடந்த போட்டியில் உபாதைக்குள்ளான மஹீஸ் தீக்ஷண பூரண குணடமடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.