ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண்சரிவு!

ஹட்டன் – பலாங்கொடை பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை தெதனகல பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண்மேடு சரிந்துள்ளதுடன் கற்பாறைகள் வீதியில் விழுந்துள்ளன.

இதன் காரணமாக குறித்த வீதியில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply