
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 32ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 190 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, பூனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
358 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தென்னாபிரிக்கா அணியின் அசுர பந்துவீச்சு ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் விக்கெட்களை பதம் பார்த்தது. க்ளென் பிலிப்ஸ் மாத்திரமே அரைச்சதத்தை கடந்தார்.
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்க்க, கேஷவ் மஹராஜ் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை விக்கெட்களை கைப்பற்றினார்.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் ஓரளவு சிறப்பாக அமைந்தது. தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் ஜோடி சேந்த ரஷி வன் டேர் டுசென், குயின்டன் டி கொக் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 200 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் குயின்டன் டி கொக் அவரது சதத்தை பூர்த்தி செய்து பிறகே ரஷி வன் டேர் டுசெனால் சதத்தை பூர்த்தி செய்ய முடிந்தது.
குயின்டன் டி கொக் இந்த உலககிண்ணத்தில் நான்காவது சதத்தையும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 21 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டார். ரஷி வன் டேர் டுசெனால் இந்த உலககிண்ணத்தில் இரண்டாவது சதத்தையும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆறாவது சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். குயின்டன் டி கொக் ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 113 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
தென்னாபிரிக்கா உலககிண்ணத்தில் அதிக 6 ஓட்டங்களை அடித்த சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் இறுக்கமாக பந்துவீசியிருந்தார்.
தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளோடு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு அரை இறுதிக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு நான்காமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| டெவோன் கொன்வே | பிடி – எய்டன் மார்க்ரம் | மார்கோ ஜனேசன் | 02 | 06 | 0 | 0 |
| வில் ஜங் | பிடி – குயின்டன் டி கொக் | ஜெரால்ட் கோட்ஸிலி | 33 | 37 | 5 | 0 |
| ரச்சின் ரவீந்திர | பிடி – ஜெரால்ட் கோட்ஸிலி | மார்கோ ஜனேசன் | 09 | 16 | 1 | 0 |
| டெரில் மிட்செல் | பிடி – டேவிட் மில்லர் | கேசவ் மகராஜ் | 24 | 30 | 4 | 0 |
| ரொம் லெதாம் | பிடி – கேசவ் மகராஜ் | ககிஸோ ரபாடா | 04 | 15 | 0 | 0 |
| கிளென் பிலிப்ஸ் | பிடி – ககிஸோ ரபாடா | ஜெரால்ட் கோட்ஸிலி | 60 | 50 | 4 | 4 |
| மிட்செல் சென்ட்னர் | Bowled | கேசவ் மகராஜ் | 07 | 18 | 1 | 0 |
| டிம் சௌதி | L.B.W | மார்கோ ஜனேசன் | 07 | 11 | 1 | 0 |
| ஜேம்ஸ் நீஷாம் | Bowled | கேசவ் மகராஜ் | 00 | 08 | 0 | 0 |
| டிரென்ட் போல்ட் | பிடி – டேவிட் மில்லர் | கேசவ் மகராஜ் | 09 | 14 | 1 | 0 |
| மட் ஹென்றி | 00 | 09 | 0 | 0 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 35.3 | விக்கெட் 10 | மொத்தம் | 167 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட் | விக் |
| மார்கோ ஜனேசன் | 08 | 01 | 31 | 03 |
| லுங்கி நிகிடி | 06 | 01 | 28 | 00 |
| ககிஸோ ரபாடா | 06 | 02 | 16 | 01 |
| ஜெரால்ட் கோட்ஸிலி | 6.3 | 00 | 41 | 02 |
| கேசவ் மகராஜ் | 09 | 00 | 46 | 04 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | பிடி – கிளென் பிலிப்ஸ் | டிம் சௌதி | 114 | 116 | 10 | 3 |
| ரெம்பா பவுமா | பிடி – டெரில் மிட்செல் | டிரென்ட் போல்ட் | 24 | 28 | 4 | 1 |
| ரஷி வன் டேர் டுசென் | Bowled | டிம் சௌதி | 133 | 118 | 9 | 5 |
| டேவிட் மில்லர் | பிடி – டெரில் மிட்செல் | ஜேம்ஸ் நீஷாம் | 53 | 30 | 2 | 4 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | 15 | 07 | 1 | 1 | ||
| எய்டன் மார்க்ரம் | 06 | 01 | 0 | 1 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 04 | மொத்தம் | 357 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டிரென்ட் போல்ட் | 10 | 01 | 49 | 01 |
| மட் ஹென்றி | 5.3 | 00 | 31 | 00 |
| டிம் சௌதி | 10 | 00 | 77 | 02 |
| மிட்செல் சென்ட்னர் | 10 | 00 | 58 | 00 |
| கிளென் பிலிப்ஸ் | 07 | 00 | 52 | 00 |
| ரச்சின் ரவீந்திர | 02 | 00 | 17 | 00 |
| ஜேம்ஸ் நீஷாம் | 5.3 | 00 | 69 | 01 |
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| தென்னாபிரிக்கா | 07 | 06 | 01 | 00 | 12 | 2.290 |
| இந்தியா | 06 | 06 | 00 | 00 | 12 | 1.405 |
| அவுஸ்திரேலியா | 06 | 04 | 02 | 00 | 08 | 0.970 |
| நியூசிலாந்து | 07 | 04 | 03 | 00 | 08 | 0.484 |
| பாகிஸ்தான் | 07 | 03 | 04 | 00 | 06 | -0.024 |
| ஆப்கானிஸ்தான் | 06 | 03 | 03 | 00 | 06 | -0.718 |
| இலங்கை | 06 | 02 | 04 | 00 | 04 | -0.275 |
| நெதர்லாந்து | 06 | 02 | 04 | 00 | 04 | -1.277 |
| பங்களாதேஷ் | 07 | 01 | 06 | 00 | 02 | -1.446 |
| இங்கிலாந்து | 06 | 01 | 05 | 00 | 02 | -1.652 |
அணி விபரம்
நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷாம், டெவோன் கொன்வே, டிம் சௌதி, மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, ககிஸோ ரபாடா