பஸ் முன்னுரிமைப் பாதை திட்டம் மீண்டும் நடைமுறையில்!

இன்று (02.11) முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக கொழும்பில் பஸ் முன்னுரிமைப் பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து காலி வீதி ஊடக புறக்கோட்டை வரை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மருதானை வீதியில் இருந்து பொரளை சந்தி, ஒல்கெட் மாவத்தை ஊடக புறக்கோட்டை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரம் இந்த பாதையில் பயணிக்க முடியும் எனவும் ஏனைய வாகனங்கள் இந்த பாதையில் செல்ல முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version