கலவான, பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஜி.பிரேமலதா எனும் 65 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (02.11) காலை இடம்பெற்ற தகராறு காரணமாக தேயிலைத் தோட்டத்தில் வைத்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த பெண்ணின் கணவர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.