
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 33 போட்டி இன்று (02.11) மும்பை, வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
துடுப்பாடிய இந்தியா அணி டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டினை வேகமாக இழந்த நிலையில் விராத் கோலி, சுப்மன் கில் ஆகியோர் அபாரமாக துடுப்பாடி இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இந்தியா அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். 189 ஓட்ட இணைப்பட்டத்தை டில்ஷான் மதுசங்க முறியடித்தார். கில் சதமடிப்பார் என்ற நிலையில் அதனை தவறவிட்டு 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டில்ஷான் மதுசங்க கோலியின் விக்கெட்டினை கைப்பற்றினார். 88 ஓட்டங்களோடு கோலி ஆட்டமிழந்தார்.
மத்திய வரிசை விக்கெட்கள் மிகப்பெரியளவில் ஓட்டங்களை குவிக்க முடியமால் போக ஷ்ரேஸ்யாஸ் ஐயர் போராடி ஓட்டங்களை அதிகாரிகரித்தார்.
இந்தியா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்த இலக்கை இலங்கை அணி பெறுவது இலகுவானது அல்ல.
டில்ஷான் மதுசங்க முதற் தடவையாக ஐந்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்த உலகக்கிண்ண தொடரில் 18 விக்கெட்களை கைப்பற்றி கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில் பிடிகளை இலங்கை களத்தடுப்பாளர்கள் தவறவிட்டமை அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இலங்கை அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகள் 4 தோல்விகளுடன் ஏழாமிடத்திலும் இந்தியா அணி விளையாடிய 6 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இரண்டாமிடத்தில் காணப்படுகின்றன.
இந்தியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தெரிவாகிவிடும். இலங்கை அணி வெற்றி பெற்றுக்கொண்டால் தங்களது வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இலங்கை அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. தனஞ்சய டி சில்வாவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த இன்று விளையாடுகிறார். இந்தியா அணி மாற்றங்களெதுவுமின்றி அதே அணியோடு விளையாடுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோஹித் ஷர்மா | Bowled | டில்ஷான் மதுஷங்க | 04 | 02 | 1 | 0 |
| சுப்மன் கில் | பிடி – குஷல் மென்டிஸ் | டில்ஷான் மதுஷங்க | 92 | 92 | 11 | 2 |
| விராத் கோலி | பிடி – பத்தும் நிஸ்ஸங்க | டில்ஷான் மதுஷங்க | 88 | 94 | 11 | 0 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – மஹீஸ் தீக்ஷண | டில்ஷான் மதுஷங்க | 82 | 56 | 3 | 6 |
| லோகேஷ் ராகுல் | பிடி – துஷான் ஹேமந்த | துஷ்மந்த சமீர | 21 | 19 | 2 | 0 |
| சூர்யகுமார் யாதவ் | பிடி – குஷல் மென்டிஸ் | டில்ஷான் மதுஷங்க | 12 | 09 | 2 | 0 |
| ரவீந்தர் ஜடேஜா | Run Out | 35 | 24 | 1 | 1 | |
| மொஹமட் ஷமி | Run out | 02 | 04 | 0 | 0 | |
| ஜஸ்பிரிட் பும்ரா | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 20 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 357 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டில்ஷான் மதுஷங்க | 10 | 00 | 80 | 05 |
| துஷ்மந்த சமீர | 10 | 02 | 71 | 01 |
| கஸூன் ரஜித | 09 | 00 | 65 | 00 |
| அஞ்சலோ மத்தியூஸ் | 03 | 00 | 11 | 00 |
| மஹீஸ் தீக்ஷண | 10 | 00 | 67 | 00 |
| துஷான் ஹேமந்த | 08 | 00 | 52 | 00 |
அணி விபரம்
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), திமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், துஷான் ஹேமந்த, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி