இலங்கை மோசமான துடுப்பாட்டம். இந்தியா அரை இறுதியில்.

இலங்கை மோசமான துடுப்பாட்டம். இந்தியா அரை இறுதியில்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 33 ஆவது போட்டியில் இன்று (02.11) இந்தியா அணி இலங்கை அணிக்கெதிராக அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

மும்பை, வங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 302 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

358 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அதற்கு அடுத்து நடைபெற்ற போட்டியில் இவ்வாறு குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் மிகவும் சிறப்பாக பந்துவீசி அச்சுறுத்தினார்கள். மொஹமட் ஷமி இந்த உலகக்கிண்ண தொடரில் இரண்டாவது ஐந்து விக்கெட்களை கைப்பற்றி இந்தியா சார்பாக உலகக்கிண்ண போட்டிகளில் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக பெயரை பதவி செய்துள்ளார். 45 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார்.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டினை வேகமாக இழந்த நிலையில் விராத் கோலி, சுப்மன் கில் ஆகியோர் அபாரமாக துடுப்பாடி இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இந்தியா அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். 189 ஓட்ட இணைப்பாட்டத்தை டில்ஷான் மதுசங்க முறியடித்தார். கில் சதமடிப்பார் என்ற நிலையில் அதனை தவறவிட்டு 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டில்ஷான் மதுசங்க கோலியின் விக்கெட்டினை கைப்பற்றினார். 88 ஓட்டங்களோடு கோலி ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசை விக்கெட்கள் மிகப்பெரியளவில் ஓட்டங்களை குவிக்க முடியமால் போக ஷ்ரேஸ்யாஸ் ஐயர் போராடி ஓட்டங்களை அதிகாரிகரித்தார்.

இந்தியா அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

டில்ஷான் மதுசங்க முதற் தடவையாக ஐந்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்த உலகக்கிண்ண தொடரில் 18 விக்கெட்களை கைப்பற்றி கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட நிலையில் பிடிகளை இலங்கை களத்தடுப்பாளர்கள் தவறவிட்டமை அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இலங்கை அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள் 5 தோல்விகளுடன் ஏழாமிடத்தில் தொடர்கிறது. இந்தியா அணி விளையாடிய 7 போட்டிகளிலுமே வெற்றி பெற்று முதலாமிடத்துக்கு முன்னேறிய அதேவேளை அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக பெற்றுள்ளது. 14 புள்ளிகளை பெறும் வாய்ப்பு நான்கு அணிகளுக்கு மட்டுமே காணப்படும் நிலையில் இந்தியா அணி தெரிவாகியுள்ளது.

இலங்கை அணி ஒரு மாற்றத்தோடு விளையாடியது. தனஞ்சய டி சில்வாவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் சேர்க்கபப்ட்டார். அவரால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்தியா அணி மாற்றங்களெதுவுமின்றி அதே அணியோடு விளையாடியது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கL.B.Wஜஸ்பிரிட் பும்ரா000100
திமுத் கருணாரட்னL.B.Wமொஹமட் சிராஜ்000100  
குஷல் மென்டிஸ்Bowledமொஹமட் சிராஜ்011000
சதீர சமரவிக்ரமபிடி- ஷ்ரேயாஸ் ஐயர்மொஹமட் சிராஜ்000400
சரித் அசலங்கபிடி- ரவீந்தர் ஜடேஜாமொஹமட் ஷமி012400
அஞ்சலோ மத்தியூஸ்Bowledமொஹமட் ஷமி122510
துஷான் ஹேமந்தபிடி- லோகேஷ் ராகுல்மொஹமட் ஷமி000100
துஷ்மந்த சமீரபிடி- லோகேஷ் ராகுல்மொஹமட் ஷமி000600
மஹீஸ் தீக்ஷண  12  23 2 0
கஸூன் ரஜிதபிடி- சுப்மன் கில்மொஹமட் ஷமி141720
டில்ஷான் மதுஷங்கபிடி- ஷ்ரேயாஸ் ஐயர்ரவீந்தர் ஜடேஜா 05   
உதிரிகள்  10   
ஓவர்  19.4விக்கெட்  10மொத்தம்55   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா05010801
மொஹமட் சிராஜ்07021603
மொஹமட் ஷமி05011805
குல்தீப் யாதவ்02000300
ரவீந்தர் ஜடேஜா0.4000401
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோஹித் ஷர்மாBowledடில்ஷான் மதுஷங்க040210
சுப்மன் கில்பிடி – குஷல் மென்டிஸ்டில்ஷான் மதுஷங்க9292112
விராத் கோலிபிடி – பத்தும் நிஸ்ஸங்கடில்ஷான் மதுஷங்க8894110
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி – மஹீஸ் தீக்ஷணடில்ஷான் மதுஷங்க825636
லோகேஷ் ராகுல்பிடி – துஷான் ஹேமந்ததுஷ்மந்த சமீர211920
சூர்யகுமார் யாதவ்பிடி – குஷல் மென்டிஸ்டில்ஷான் மதுஷங்க120920
ரவீந்தர் ஜடேஜாRun Out 352411
மொஹமட் ஷமிRun out 020400
ஜஸ்பிரிட் பும்ரா  010100
       
       
உதிரிகள்  20   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்357   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுஷங்க10008005
துஷ்மந்த சமீர10027101
கஸூன் ரஜித09006500
அஞ்சலோ மத்தியூஸ்03001100
மஹீஸ் தீக்ஷண10006700
துஷான் ஹேமந்த08005200
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா07070000142.102
தென்னாபிரிக்கா07060100122.290
அவுஸ்திரேலியா06040200080.970
நியூசிலாந்து07040300080.484
பாகிஸ்தான்0703040006-0.024
ஆப்கானிஸ்தான்0603030006-0.718
இலங்கை0702040004-1.162
நெதர்லாந்து0602040004-1.277
பங்களாதேஷ்0701060002-1.446
இங்கிலாந்து0601050002-1.652

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), திமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், துஷான் ஹேமந்த, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

Social Share

Leave a Reply