நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவளிக்கும் என அதன் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற வரிக் கொள்கையினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கெதிரான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் நடவடிக்கையைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.