இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாக குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்த இடைக்கால நிர்வாக குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இடைக்காலக் குழுவின் தலைவராக முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணிகளான ரகித ராஜபக்ஷ, ஹிஷாம் சமால் ராஜபக்ஷ ஆகியோர் இந்த இடைக்கால நிர்வாக குழுவில் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25ம் இலக்க விளையாட்டு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் அமைச்சரினால் இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply