மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் உள்ள பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூட அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட புதுடெல்லியின் தலைநகர் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளதாக அண்மைய தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், மருத்துவ ஆலோசனையை கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளையும் வரும் 10ம் திகதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பண்டிகை காலங்களில், பட்டாசு வெடிப்பது போன்ற செயற்பாடுகளும் இந்த மாசுபாட்டை அதிகரிக்கின்றது.