மண்சரிவு காரணமாக வெலிமடை – ஹப்புத்தளை வீதி முற்றாக மூடல்!

மண்சரிவு காரணமாக வெலிமடை பொரலந்த ஹப்புத்தளை வீதி இன்று (06.11) முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றி விரைவில் வீதியை வழமைக்கு திருப்ப எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வழியாக பயணிக்க வேண்டிய வாகன சாரதிகள், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply