வெயாங்கொட நகரில் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (06.11) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளும் முற்றாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக, போக்குவரத்தும், மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது.