கிரிக்கெட் இடைக்கால சபைக்கு ஜனாதிபதி பச்சைக்கொடி!

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவை நியமிக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஆராய நான்கு பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று இன்று (06.11) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை குழுவின் பிரதான நோக்கம் கிரிக்கெட்டை மேலும் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய சிறந்த நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையிலான இந்த குழுவில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக குழு தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனும் பின்னணியில் இந்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply