
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த குசல் மென்டிஸ், பத்தும் நிசங்க ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். குசல் மென்டிஸ், பத்தும் நிசங்க இருவரும் ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். சதீர ஆட்டமிழந்ததுடன் துடுப்பாட வந்துகொண்டிருந்த அஞ்சலோ மத்தியூஸின் தலைக்கவசம் உடைந்ததன் காரணமாக புது தலைக்கவசம் எடுத்து கொண்டு வரும் போது நடுவர்கள் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்துவிட்டதாக கூறியிருந்தார். 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க ஆகியோர் 78 ஓட்டங்களை இணைப்பட்டமாக பகிர்ந்து கொண்டனர். சரித் அசலங்க அதிரடியாகவும், நிதானமாகவும் துடுப்பாடி அவரது 2 ஆவது சதத்தையும் உலககிண்ணத்தில் 1 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்து மீள்வருகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். மஹீஸ் தீக்ஷணவும் நிதானமாக துடுப்பாடி சரித் அசலங்கவின் சதத்திற்கு உதவி செய்து 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் இறுக்கமாக பந்துவீசியிருந்தார். மெஹிடி ஹசன் மிராஸ் இலங்கை அணியின் முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது. இந்த ஓட்ட இலக்கை குறி வைத்து துடுப்பாடிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப 2 விக்கெட்களை டில்ஷான் மதுசங்க வேகமாக கைப்பற்றிக் கொடுத்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் சண்டோ, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் 169 ஓட்ட இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி தமது பக்கமாக வெற்றி வாய்ப்ப்பை மாற்றினார்கள். இருவது விக்கெட்களையும் அஞ்சலோ மத்தியூஸ் கைப்பற்றினர். இருந்தாலும் தாமதமான விக்ட்களாக அமைந்து போய்விட்டன.
டில்ஷான் மதுசங்க கூடுதலான விக்கெட்களை இந்த தொடரில் கைப்பற்றியுள்ளார். 21 விக்கெட்ளை 8 போட்டிகள் கைப்பற்றியுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரன்ஷித் ஹசன் தமீம் | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | டில்ஷான் மதுஷங்க | 09 | 05 | 2 | 0 |
| லிட்டொன் டாஸ் | L.B.W | டில்ஷான் மதுஷங்க | 23 | 22 | 2 | 2 |
| நஜ்முல் ஹொசைன் சாண்டோ | Bowled | அஞ்சலோ மத்தியூஸ் | 90 | 101 | 12 | 0 |
| ஷகிப் அல் ஹசன் | பிடி- சரித் அசலங்க | அஞ்சலோ மத்தியூஸ் | 82 | 65 | 12 | 2 |
| மஹ்மதுல்லா | Bowled | மஹீஸ் தீக்ஷண | 22 | 23 | 2 | 1 |
| முஷ்பிகுர் ரஹீம் | Bowled | டில்ஷான் மதுஷங்க | 10 | 13 | 1 | 0 |
| தௌஹித் ரிடோய் | 15 | 07 | 2 | 0 | ||
| மெஹிதி ஹசன் மிராஸ் | பிடி- சரித் அசலங்க | மஹீஸ் தீக்ஷண | 03 | 05 | 0 | 0 |
| ரன்ஷிம் ஹசன் | 05 | 06 | 1 | 0 | ||
| உதிரிகள் | 23 | |||||
| ஓவர் 41.1 | விக்கெட் 07 | மொத்தம் | 282 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டில்ஷான் மதுஷங்க | 10 | 01 | 69 | 03 |
| மஹீஸ் தீக்ஷண | 09 | 00 | 44 | 02 |
| கஸூன் ரஜித | 04 | 00 | 47 | 00 |
| துஷ்மந்த சமீர | 08 | 00 | 54 | 00 |
| அஞ்சலோ மத்தியூஸ் | 7.1 | 01 | 39 | 02 |
| தனஞ்சய டி சில்வா | 03 | 00 | 20 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | Bowled | ரன்ஷிம் ஹசன் | 41 | 36 | 8 | 0 |
| குசல் பெரேரா | பிடி- முஷ்பிகுர் ரஹீம் | ஷொரிபுல் இஸ்லாம் | 04 | 05 | 1 | 0 |
| குஷல் மென்டிஸ் | பிடி- ஷொரிபுல் இஸ்லாம் | ஷகிப் அல் ஹசன் | 19 | 30 | 1 | 1 |
| சதீர சமரவிக்ரம | பிடி- மஹ்மதுல்லா | ஷகிப் அல் ஹசன் | 41 | 42 | 8 | 0 |
| சரித் அசலங்க | பிடி- லிட்டொன் டாஸ் | ரன்ஷிம் ஹசன் | 108 | 105 | 6 | 5 |
| அஞ்சலோ மத்தியூஸ் | Timed Out | 00 | 00 | 0 | 0 | |
| தனஞ்சய டி சில்வா | Stump – முஷ்பிகுர் ரஹீம் | மெஹிதி ஹசன் மிராஸ் | 34 | 36 | 4 | 1 |
| மஹீஸ் தீக்ஷண | பிடி- நசும் அஹமட் | ஷொரிபுல் இஸ்லாம் | 22 | 31 | 3 | 0 |
| துஷ்மந்த சமீர | Run Out | 04 | 09 | 0 | 0 | |
| கஸூன் ரஜித | பிடி- லிட்டொன் டாஸ் | ரன்ஷிம் ஹசன் | 00 | 02 | 0 | 0 |
| டில்ஷான் மதுஷங்க | 00 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 06 | |||||
| ஓவர் 49.3 | விக்கெட் 10 | மொத்தம் | 279 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஷொரிபுல் இஸ்லாம் | 9.3 | 00 | 51 | 02 |
| தஸ்கின் அஹமட் | 10 | 01 | 39 | 00 |
| ரன்ஷிம் ஹசன் | 10 | 00 | 80 | 03 |
| ஷகிப் அல் ஹசன் | 10 | 00 | 57 | 02 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | 10 | 00 | 49 | 01 |
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளைப் பெற்று இடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி 4 புள்ளிகளோடு இடத்தில் காணப்படுகிறது.
இந்த உலகக்கிண்ண தொடரில் எட்டு இடங்களுக்குள் வரும் அணிகள் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும். ஆகையால் இரு அணிகளும் அதனை குறிவைத்து இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணி ஏழாமிடத்தில் காணப்படுகின்றது. இன்று வெற்றி பெற்றால் ஏழாமிடம் தொடரும். பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால் ஏழாமிடம் வரை முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் அரை இறுதி வாய்ப்புக்களை இழந்துள்ளன.
அணி விபரம்
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், ரன்ஷிம் ஹசன் , ஷொரிபுல் இஸ்லாம்