அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சிறந்த துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சிறந்த துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 39 ஆவது போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஷர்டான் சதமடித்து நல்ல ஆரம்பத்தை வழங்கினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. அனைவருடனும் நல்ல இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். பலமான அவுதிரேலியா அணியின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரியளவில் அச்சறுத்தலாக அமையவில்லை.

இறுதி நேரத்தில் ஷர்டான், ரஷீட் கான் ஜோடி அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர், இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட இலக்கை அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக இறுக்கமாக பந்துவீசினால் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு வாய்ப்பு தொடரும். அவுஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளோடு நான்காமிடத்தில் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு ஆறாமிடத்தில் காணப்படுகிறது. இன்றைய போட்டி இந்த இரு அணிகளுக்கு மட்டுமன்றி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளது அரை இறுதி தெரிவிக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

ஆப்கானிஸ்தான் அணி முக்கிய அணிகளை வென்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் இன்று அவுஸ்திரேலியா அணிக்கு சவால் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – மிட்செல் ஸ்டார்க்ஜோஸ் ஹெஸல்வூட்212520
இப்ராஹிம் ஷர்டான்  12914383
ரஹ்மத் ஷாபிடி – ஜோஸ் ஹெஸல்வூட்க்ளென் மக்ஸ்வெல்304410
ஹஷ்மதுல்லா ஷஹிதிBowledமிட்செல் ஸ்டார்க்264320
அஸ்மதுல்லா ஓமர்சாய்பிடி – க்ளென் மக்ஸ்வெல்அடம் ஷம்பா221812
மொஹமட் நபிBowledஜோஸ் ஹெஸல்வூட்121011
ரஷீட் கான்  351823
       
       
       
       
உதிரிகள்  16   
ஓவர்  50விக்கெட்  05மொத்தம்291   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்09007000
ஜோஸ் ஹெஸல்வூட்09003902
க்ளென் மக்ஸ்வெல்10005501
பட் கம்மின்ஸ்08004700
அடம் ஷம்பா10005801
ட்ரவிஸ் ஹெட்03001500
மார்கஸ் ஸ்ரொய்னிஸ்01000200

அணி விபரம்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version