இடைக்கால நிர்வாக சபையை நீக்க ஜனாதிபதி அழுத்தம் – விளையாட்டு அமைச்சர்

தான்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் வழங்கியதாக விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று(07.11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் நடந்தவற்றை தான் கூற முடியாது எனவும், ஜனாதிபதி தன்னிடம் தனியாகவும், காரியாலத்துக்கு தொலைபேசி மூலமாகவும் பேசி நியமிக்கப்பட்ட அர்ஜுனா ரணதுங்க தலைமையிலான இடைக்கால நிர்வாக சபையை நீக்குமாறும் இல்லாவிட்டால் விளையாட்டு சட்டங்களை தனது பொறுப்பில் எடுப்பேன் என கூறியதாகவும் ரொஷான் ரணசிங்க பாரளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்ய வேண்டாமெனவும், தன்னை அமைச்சு பதவியிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் தேவையானதை செய்யுங்கள் என்று தான் கூறியதாகவும், விளையாட்டு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கள் அதிமாக ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகவும் எந்த ஒரு நிலையிலும் தான் இடைக்கால நிர்வாக சபையை இரத்து செய்ய மாட்டேன் எனவும் விளையாட்டு துறை அமைச்சர் ஜனாதிபாதிக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்படவுள்ளதனை அறிந்து சில தினங்களுக்குள் பில்லியன் கணக்கிலான காசோலைகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் எழுதப்பட்டுள்ளதாகவும், தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்துக்கு அதிக கணக்கில் அவசரமாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதகவும் மேலும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply