தடுமாறி மீண்ட இங்கிலாந்து

தடுமாறி மீண்ட இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 40 ஆவது போட்டி இன்று (08.11) பூனேயில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. 2 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ஜோ ரூட், டேவிட் மலான் ஆகியோர் 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். டேவிட் மலான் அதிரடியாக துடுப்பாடி அவரது 7 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். ஜோ ரூட் ஆட்டமிழந்ததுடன் விக்கெட்டுகள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 7 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பென் ஸ்ட்ரோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்திக்கொடுத்தனர். பென் ஸ்ட்ரோக்ஸ் அவரது 5 ஆவது சதத்தையும் உலககிண்ணத்தில் 1 ஆவது சதத்தையும் அதிரடியாக துடுப்பாடி பூர்த்தி செய்து கொண்டார். கிறிஸ் வோக்ஸ் அவரது 6 ஆவது அரைச்சதத்தத்தையும் இந்த உலககிண்ணத்தில் 1 ஆவது அரைச்சதத்தத்தையும் பூர்த்தி செய்து கொண்டார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்பிடி- போல் வன் மீகெரென்ஆர்யன் டட்151720
டாவிட் மலான்Run Out 8774102
ஜோ ரூட்Bowledலோகன் வன் பீக்283510
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் பிடி- சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் லோகன் வன் பீக் 108 84 6
ஹரி புரூக்பிடி- கொலின் அக்கர்மன்பஸ் ட லீடா111620
ஜோஸ் பட்லர்பிடி- தேஜா நிடமனுருபோல் வன் மீகெரென்051100
மொயீன் அலிபிடி- பஸ் ட லீடாஆர்யன் டட்041500
கிறிஸ் வோக்ஸ்பிடி- ஸ்கொட் எட்வேர்ட்ஸ்பஸ் ட லீடா514551
டேவிட் வில்லிபிடி- சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்பஸ் ட லீடா060201
கஸ் அடிக்சன்   02 01 0 0
ஆடில் ரஷிட்   0101  0
உதிரிகள்  21   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்339   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஆர்யன் டட்10006702
லோகன் வன் பீக் 10008802
போல் வன் மீகெரென்10005701
பஸ் ட லீடா10007403
ரோலோஃப் வன் டெர் மேர்வ்03002200
கொலின் அக்கர்மன்07003100

இங்கிலாந்து அணி இரு மாற்றங்களுடன் இன்று விளையாடுகிறது. லியாம் லிவிங்ஸ்டனிற்கு பதிலாக ஹரி புரூக்கும் மார்க் வூடிற்கு பதிலாக கஸ் அடிக்சனும் விளையாடுகின்றனர். நெதர்லாந்து அணி 1 மாற்றத்தோடு இன்று விளையாடுகிறது. ஷகிப் சுல்பிகரிற்கு பதிலாக தேஜா நிடமனுரு விளையாடுகிறார்.

அணி விபரம்

நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, வெஸ்லி பரசி, தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஹரி புரூக், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், கஸ் அடிக்சன், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply