தொடரும் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம்

தொடரும் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 41 ஆவது போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

இலங்கை அணி சார்பாக குஷல் பெரேரா சிறந்த ஆரம்பத்தை அதிரடியாக வழங்கிய பொதும் இன்றும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்ததும் சென்றதுமாக ஆட்டமிழந்தனர். குஷல் பெரேரா அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மஹீஸ் தீக்ஷிண நீண்ட நேரம் நின்று நிலைத்து துடுப்பாடியதன் காரணமாக அதிக ஓவர்களை இலங்கை அணி எதிர்கொள்ள முடிந்தது. அதன் காரணமாக இலங்கை அணிக்கு ஓட்டங்கள் ஓரளவு அதிகரித்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் இலங்கை அணியின் அணியின் முன் வரிசை விக்கெட்களை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர் ஏனைய பந்துவீச்சாளர்கள் ஏனைய விக்கெட்களை கைப்பற்ற இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் ஐந்து விக்கெட்கள் 10 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன. ஏனைய 5 விக்கெட்கள் 36.4 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன. இதில் இறுதி 2 விக்கெட்கள் 23.1 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன.

இந்த இலக்கை நியூசிலாந்து அணி அடைவதில் சிக்கல் நிலைகளை எதிர்கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- ரொம் லெதாம்டிம் சௌதி020800
குஷல் பெரேராபிடி- ரொம் லெதாம்லூக்கி பெர்குசன்512892
குஷல் மென்டிஸ்பிடி- ரச்சின் ரவீந்திரடிரென்ட் போல்ட்060710
சதீர சமரவிக்ரமபிடி- டெரில் மிட்செல்டிரென்ட் போல்ட்010200
சரித் அசலங்கL.B.Wடிரென்ட் போல்ட்080810
அஞ்சலோ மத்தியூஸ்பிடி- டெரில் மிட்செல்மிட்செல் சென்ட்னர்162720
தனஞ்சய டி சில்வாபிடி- டெரில் மிட்செல்மிட்செல் சென்ட்னர்192421
சாமிக்க கருணாரட்னபிடி- ரொம் லெதாம்லூக்கி பெர்குசன்061710
மஹீஸ் தீக்ஷண  399130
துஷ்மந்த சமீரபிடி- டரென்ட் போல்டரச்சின் ரவீந்திர012000
டில்ஷான் மதுஷங்கபிடி- ரொம் லெதாம்ரச்சின் ரவீந்திர194820
உதிரிகள்  03   
ஓவர்  46.4விக்கெட்  10மொத்தம்171   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டரென்ட் போல்ட10033703
டிம் சௌதி05004301
லூக்கி பெர்குசன்10023502
மிட்செல் சென்ட்னர்10022202
ரச்சின் ரவீந்திர7.4002202
கிளென் பிலிப்ஸ்01000300

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்று தொடரின் தமக்கான இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றாலே சம்பியன் கிண்ண தொடருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் விளையாடுகிறனர். நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளாகலாம். இதன் காரணமாக இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜிதவுக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன சேர்க்கப்பட்டுள்ளர். நியூசிலாந்து அணியில் ஐஸ் சோதிக்கு பதிலாக லூக்கி பெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரட்ன

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (தலைவர்), டெவோன் கொன்வே, மார்க் சப்மன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், டிம் சௌதி

Social Share

Leave a Reply