யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தி பகுதியில் கடந்த 3 நாட்களாக கிராம மக்கள் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பல சந்தர்ப்பங்களில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (08.11) மீண்டும் இரண்டு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதல் நிலை கோப்பாய் பொலிஸாரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொலிஸாருக்கும், பொது அமைதிக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட மூன்று பெண்கள் உட்பட 23 பேரை கைது செய்யது, யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட குழுவினரை கடுமையாக எச்சரித்த நீதவான், அவர்களை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.